கல்வித் தொலைக்காட்சிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது-www.kalvitholaikatchi.com - KALVICIRCLE - SSLC | PLUS ONE | PLUS TWO | TNPSC EXAM QUESTIONS

Post Top Ad

8/26/2019

கல்வித் தொலைக்காட்சிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது-www.kalvitholaikatchi.com

கல்வித் தொலைக்காட்சிக்காக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது - www.kalvitholaikatchi.com


kalvi

2017-18 ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையமாக கல்வித் தொலைக்காட்சி மிக நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

1. மனித வளம் உயர்ந்தோங்க
நாளைய சமுதாயம் நிறைவடைய
தொலைகாட்சிகளில் முன்னோடியாக
உலகளவில் முதன்முறையாக கல்வித் துறை கல்வியாளர்கள் உருவாக்கிய
கல்விக்கென சிறப்பு தொலைக்காட்சி
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி.

2. தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் வழி- கல்விக்கான கல்வி, புரட்சி கல்வித் தொலைக்காட்சி.

3. மழலையர் முதல் முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்குகிறது கல்வித் தொலைக்காட்சி

4. வல்லுநர்கள், கல்வியாளர்கள், மனிதவள வளர்ச்சியில் சிறந்து விளங்கும் முன்னோடிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, பாடத்திட்டம் சார்ந்த கருத்துக்களையும், போட்டித் தேர்வுகளுக்கான விளக்கங்ளையும் மனித மேம்பாட்டிற்கான வாழ்க்கை வழிகாட்டிகளையும் ஆழமான புரிந்துணர்தலையும் ஏற்படுத்தும் வகையில் மிகச் சிறப்பாக கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.

5. தமிழக அரசு, பாடத்திட்டம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 50 சதவிகிதமும், NEET, JEE போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 10 சதவிகிதமும் மனிதம் வளர்க்கும் நல்லொழுக்கம், மனிதநேய நிலைத்தன்மை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு 40 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டு நிகழ்ச்சி தயாரிப்பு நடைபெறுகிறது.

6. இக்கல்வித் தொலைக்காட்சி நிலையம் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-வது தளத்தில் நிறுவப்பட்டுள்ளது.

7. கற்றலை இனிமையாக்கி இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும் கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

8. கல்வியும் கலையும் கல்வித் தொலைக்காட்சியின் சீரிய குறிக்கோள் கல்வியோடு ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நாட்டுப்பற்று போன்ற நற்பண்புகளைக் கதைகளாகவும், குறும்படங்களாகவும் தயாரித்து ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

9. தமிழ் செய்யுள் பகுதிகள் மற்றும் ஆங்கில மனப்பாடப் பகுதிகள் போன்றவை மனதைக் கவரும் இசை மற்றும் நடனப் பாடல்களாக, கற்றலை இனிமையாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

10. தமிழகத்தின் அனைத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் நல் ஆதரவுடன் கல்வியின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் இக்கல்வித் தொலைக்காட்சி இந்தியா மட்டுமல்லாது, இந்த உலகிற்கே மிகப் பெரிய முன்னோடித் திட்டமாக உருவெடுத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad