Current Affairs Daily in Tamil 16-08-2019
10. ஐ.நா., சபையில், காஷ்மீர் குறித்த விவாதத்திற்கு பின், நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பாக்., நிருபருடன், இந்திய தூதர் சையத் அக்பருதின நட்புரீதியில் கைகுலுக்கிய வீடியோ சமூக வலைதளங்ளில் வேகமாக பரவி வருகிறது.9.இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 2.90 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது.
8.நாட்டின் ஏற்றுமதி, ஜூலை மாதத்தில், 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறையும் நான்கு மாதங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
7.ராஜ அலங்காரத்துடன் இன்று இரவு அனந்தசரஸ் குளத்துக்குள் இறங்கவுள்ளார் அத்திவரதர்.
6.மத்திய அரசின் சார்பில் விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா. நடப்பு ஆண்டு, விருது பெறவுள்ள நட்சத்திரத்தை தேர்வு செய்ய, முன்னாள் வீரர் பாய்ச்சங் பூட்டியா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய கமிட்டியின் கூட்டம் நடந்தது. மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, 25, பெயர் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பஜ்ரங் சர்வதேச அரங்கில் அசத்தினார். காமன்வெல்த் (கோல்டு கோஸ்ட், ஆஸி.,), ஆசிய விளையாட்டில் (ஜகார்த்தா, இந்தோனேசியா) 65 கி.கி., பிரிவில் தங்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் (புடாபெஸ்ட், ஹங்கேரி) வெண்கலம் கைப்பற்றி இருந்தார்.
5.கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4.இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, பூடான் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற மோடியை, பூடான் பிரதமர் லோடேய் ஷெரீங் வரவேற்றார். தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
3.துபாய்: உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண தேசிய கொடி நிறத்திலான ஒளிவிளக்குகளால் பிரகாசித்தது.
2.கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆட்டோத்துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீடுகளை நிறுத்தியதாக அறிவித்த ஆட்டோ நிறுவனங்கள், தற்போது வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
1.நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் எண் அவசியம் என, மத்திய அரசு தீவிரம் காட்டியபோது, தேர்தல் ஆணையம் அடக்கியே வாசித்தது. வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பதையும் அவரவர் விருப்பம் என்ற, அளவிலேயே நின்றது. ஆனால், தற்போது, தேர்தல் ஆணையம், இவ்விஷயத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment