Current Affairs Daily 26/08/2019 - KALVICIRCLE - SSLC | PLUS ONE | PLUS TWO | TNPSC EXAM QUESTIONS

Post Top Ad

8/26/2019

Current Affairs Daily 26/08/2019

Current Affairs Daily 26/08/2019

10.இந்தியாவிலேயே சிறப்பான மாநிலங்களுக்கான விருதுகளை அதிகம் பெற்றுள்ளோம்; தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி

9.சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த சேனல் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.சென்னையில் முதல் முறையாக துவங்கப்படும் மின்சார பஸ் சேவையை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் அதில் பயணம் செய்தனர்.

7.பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விருது வழங்கப்பட்டதை அடுத்து பாக்., செனட் தலைவர் தனது ஐக்கி அரபு நாடு க்கான சுற்று பயணத்தை ரத்து செய்துள்ளார்.

6.இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது'' என பாகிஸ்தான் அதிபர் அரிப் அல்வி அலறியுள்ளார்.

5.உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தாார் சிந்து.
சுவிட்சர்லாந்தில் உள்ள பசல் நகரில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‘நம்பர்–5’ வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார். முதல் செட்டை 21–7 எனக் கைப்பற்றிய சிந்து, 2வது செட்டை 21–7 என தன்வசப்படுத்தினார்.
மொத்தம் 38 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21–7, 21–7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 42 ஆண்டு கால உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், செய்னா நேவல் (2015), சிந்து (2017, 2018) வெள்ளி வென்றிருந்தனர்.

4.முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவு, பிரான்ஸ், உள்ளிட்ட 11 நாடுகளில் சொத்து இருப்பதாக அமலாக்கதுறை சார்பில் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

3.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு குழு (SPG) பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2.மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதிக்கு 200 சோலார் விளக்குகளை பரிசாக வழங்கி உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

1.பிரான்சில் நடக்கும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற மோடி அவர்கள் பிரான்ஸ், செனகல் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சு நடத்தினார்.

No comments:

Post a Comment

Post Top Ad