Current Affairs Daily in Tamil 18&19-08-2019
9. ஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர் லாபஸ்சேக்னே 142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.8. வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய வீரர் புஜாரா சதம் அடித்தார்.
7. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
6.மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டமான, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்
5.ஆப்கன் நாடு, இன்று(ஆக்.,19) 100வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
ஆங்கிலேயர்கள் பிடியில் இருந்த அந்த நாடு, சுதந்திரம் அடைந்து, இன்றுடன், 100 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, நாடு முழுவதும் கொண்டாட்டங்களுக்கு, அதிபர், அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.
4.பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும், 26ம் தேதி துவக்கப்பட உள்ளது.பள்ளி கல்வி நிகழ்ச்சிகளையும், பாடங்களையும் ஒளிபரப்ப, கல்வி, 'டிவி' என்ற தொலைக்காட்சி அறிமுகமாகிறது. இதற்கான பூர்வாங்க பணிகள், ஓராண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், வரும், 26ம் தேதி முதல், ஒளிபரப்பு துவங்க உள்ளது. கல்வி, 'டிவி'யை, முதல்வர், இ.பி.எஸ்., துவக்கி வைக்க உள்ளார். இந்த, 'டிவி'க்கு, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், ஸ்டுடியோ அமைக்கப்பட்டு உள்ளது.
3.இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
2.பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறி, கடந்த 1992ம் ஆண்டு, டிச.,6ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
1. அரசின் அறிவிப்பை தொடர்ந்து, ஆவின் பால் விலை உயர்வு, இன்று (ஆக.19) முதல் நடைமுறைக்கு வருகிறது. விரைவில், ஆவின் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது.அதே நேரம், விற்பனை விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது.
No comments:
Post a Comment