Current Affairs in Tamil 9-2-2020
9. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் இ,பி,எஸ்., அறிவித்துள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி தரப்படாது எனவும் கூறியுள்ளார்.8. சேலம் மாவட்டம் தலைவாசலில், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு முதல்வர் இ.பி.எஸ்., அடிக்கல் நாட்டினார்.
7. ஆந்திர சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 'திசா' சட்டத்தை நிறைவேற்றினார். இதற்காக மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களின் திசா பெயரில் தனி போலீஸ் ஸ்டேஷன், தனி நீதிமன்ற அமைப்பு துவங்கப்படும் என அறிவித்தார்.ஆந்திர மாநிலம் கொண்டு வந்த திசா சட்டத்தை டில்லி மற்றும் மஹாராஷ்டிர அரசுகளும் அமல்படுத்தப் போவதாக கூறிவருகிறது.
6. ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திசா என்ற புதிய சட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்துள்ளார். அதன்படி இன்று திசா போலீஸ் ஸ்டேஷனையும், திசா செயலியையும் துவக்கி வைத்தார்.
5. 'இரண்டரை மணி நேரத்திற்கு பட்ஜெட் உரையைப் படித்து, போரடித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்' என, அனைவரும் சொன்னாலும், ஒரு பெரிய விஷயத்தை அமைதியாக சாதித்துள்ளார் அவர். பட்ஜெட் உரையில், காஷ்மீரின் மிகச் சிறந்த கவிஞர் தீன நாத் கவுலின் கவிதையைப் படித்தார்.
இந்தக் கவிதை 1946ல் எழுதப்பட்டது. 'அரசு எதைச் செய்தாலும், அது மக்களின் நன்மைக்கே' என இந்த கவிதை சொல்கிறது.இந்த கவிதையை, ஷாரதா மொழி எழுத்திலேயே பட்ஜெட் பேப்பர்களில் அச்சிட வேண்டும் என சொல்லிவிட்டார் நிர்மலா.
4.கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
விமானங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களில் 0.219 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. இந்திய விமான நிலையங்களில் டில்லி விமான நிலையத்திற்கு வருவோரில் 0.066 சதவீதத்தினரும், மும்பை விமான நிலையத்தில் 0.034 சதவீதத்தினரும், கோல்கட்டா விமான நிலையத்தில் 0.020 சதவீதத்தினரும் இந்த அறிகுறியுடன் வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அண்டார்டிகாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, 18.3 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், கடல் நீர் மட்டம் விரைவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
2.கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு சீனாவிற்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
1. ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை பிப்., 5-ம் தேதி வந்தடைந்தது.70 வயதான முதியவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து யோகோமாகா துறைமுகத்தில் கப்பல் நிறுத்திவைக்கப்பட்டது.கப்பலில் உள்ளவர்களில், 138 பேர் இந்தியர்கள். அவர்களுக்கு நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை' என, துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment