current affairs daily 17-2-2020 - tnpsc exams
tnpsc current affairs and gk daily 17-2-2020
tnpsc group 1, group-2, group-4 exam current affairs and gk in tamil
9. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகிய நடவடிக்கைகளை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.8. சீனாவில் 'கோவிட்-19' வைரஸ் என்றழைக்கப்படும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பாரம்பரிய மருந்து வழங்கி வருவதாக சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
7. இந்தியாவில் மும்பை மற்றும் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினரை காணவில்லை என பாக்., தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
6. ரோட்டரி இண்டர்நேஷனலின் நூற்றாண்டு விழா 2020 பிப்ரவரி 14-16
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற ரோட்டரி இண்டர்நேஷனலின் நூற்றாண்டு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
5. 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள கெஜ்ரிவாலுக்கு பிரதமர்மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது டுவிட்டரில் அர்விந்த் கெஜ்ரிவாலின் சிறப்பான ஆட்சி தொடர வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
4. ஐதராபாதில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, விளம்பர பலகை அமைத்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரிடம், பெருநகர மாநகராட்சி அதிகாரிகள், 5,000 ரூபாய் அபராதம் வசூல் செய்தனர்.3. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள, முதல், 'யோகா' பல்கலை கழகத்தில், முதுநிலை பட்ட படிப்பின் வகுப்புகள், ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளன.
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், யோகா பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே நிறுவப்பட்டுள்ள, முதல் யோகா பல்கலையான இதை, வாயு எனப்படும், விவேகானந்தா யோகா பல்கலை, 35.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைத்துள்ளது. இங்கு, சில மாதங்களில், வகுப்புகள் துவங்க உள்ளன.
2. உத்தர பிரதேசத்தில், போலீஸ் தடை உத்தரவை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய, காங்கிரஸ் பிரமுகரிடம், 1 கோடி ரூபாய் வசூலிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
உ.பி.,யில், உள்ள மொரதாபாதில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கும் வகையில், போலீசார் தடை உத்தரவு பிறப்பித்தனர். உள்ளூரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், கடந்த லோக்சபா தேர்தலில், மொரதாபாத் தொகுதியில், அக்கட்சி சார்பில் போட்டியிட்டவருமான இம்ரான் பிரதாப்கார்கி, தடை உத்தரவை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இதில், இரு பிரிவினருக்கும் இடையே வன்முறையை துாண்டும் விதமாக, அவர் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தின்போது, வன்முறை சம்பவங்களை தடுப்பதற்காக, துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடந்ததில் இருந்து, எட்டு நாட்களுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்ததாகவும், இதற்காக மாவட்ட நிர்வாகம், 1 கோடி ரூபாய் செலவிட்டதாகவும் தகவல் வெளியானது.
1. உலகிலேயே, மிக குறைந்த வயதில், முதுமை காரணமாக உயிரிழந்தவர், அன்னா என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் வசித்து வருபவர், இவானா. இவருக்கு, அன்னா சாகிடோன் என்ற பெண் குழந்தை இருந்தது.உலகில் வெறும், 160 பேரை மட்டுமே பாதித்துள்ள, 'புரோஜீரியா' என்ற மரபணு நோயால், அக்குழந்தையும் பாதிக்கப்பட்டிருந்தது.8 வயதே ஆன அச்சிறுமி, 80 வயதுக்கான முதுமையுடன் இருந்தார். மருத்துவ மனையில் அச்சிறுமியின் உடல் உள் உறுப்புகள், அடுத்தடுத்து செயலிழந்தன. டாக்டர்கள் கடுமையாக போராடியும் பலனளிக்காததால், நேற்று முன்தினம், சிறுமி அன்னா சாகிடோன், பரிதாபமாக உயிரிழந்தார்.
No comments:
Post a Comment