Current Affairs Daily in Tamil 16-08-2019
9.புதுச்சேரி மாநிலம் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைந்த தினத்தையொட்டி, கீழூரில் நடைபெற்ற விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டனர்.
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, கடந்த 1954 ம் ஆண்டு, நவம்பர் 1 ம் தேதி விடுதலை பெற்றது. என்றாலும் 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ந்தேதி தான், முறைப்படி இந்தியாவுடன் இனைந்து, அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
8.வடதுருவத்தின் வழியாகப் பயணிகள் விமானத்தை இயக்கிய முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை ஏர்இந்தியா பெற்றுள்ளது.டெல்லி-சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர்இந்தியா விமானம் அட்லாண்டிக் கடல் அல்லது பசிபிக் கடல் வான்மார்க்கத்தில் பறந்து செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது.சுதந்திர தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு 243 பேருடன் புறப்பட்ட ஏர்இந்தியாவின் டெல்லி-சான்பிரான்சிஸ்கோ விமானம் வடதுருவத்தின் வழியாக பறந்து அமெரிக்கா சென்றுள்ளது.
7.இந்திய ராணுவத்தின் முப்படைகளையும் ஒருங்கிணைத்து தலைமை தாங்கும் வகையில் Chief Of Defence Staff (CDS) எனப்படும் முப்படைத் தலைவர் பதவி விரைவில் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
6.சென்னை பெருநகர காவல் துறையில் சிசிடிவி உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்ப முயற்சிகளை கொண்டு வந்து வரவேற்பை பெற்றதற்காக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.
5.முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
4.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான V.B.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவன பின்னணியோ பெரிய ஸ்பான்சர்களோ இல்லாமல் காஞ்சி வீரன்ஸ் என்ற டிஎன்பிஎல் அணியை தனியொரு ஆளாக நடத்தி, கடன் பிரச்சனையில் சிக்கியதே அவரது தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
3.அத்திவரதர் தரிசனம்: நீட்டிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு- விரிவாக படிக்க
2. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பது இந்தியாவின் கொள்கை. ஆனால், எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து இது மாறலாம் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்திய பிறகு ராஜ்நாத் கூறுகையில், இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றுவது என்பது நமது தீர்க்கமான முடிவு. அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இதில், தற்போதும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், எதிர்காலத்தில், அணு ஆயுதத்தை பயன்படுத்துவது சூழ்நிலைக்கு ஏற்றவாறு முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
1. 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன் - கோலி புதிய சாதனை
10 ஆண்டுகளில் 20 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் 2010 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 371 போட்டிகளில் 20 ஆயிரத்து 18 ரன் குவித்து உள்ளார்.
No comments:
Post a Comment