Current Affairs Daily 27/08/2019
20. அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டி நடத்தியது. இதில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி நாசாவுக்கு செல்ல உள்ளார்.
இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி தான்யா, ஆந்திர மாணவி புஜிதா, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஷர்மா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், இவர்கள் நாசாவுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூவரும், அக்டோபரில் நாசா செல்ல உள்ளனர்.
19.ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது என்று நாசா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபா சர்வதேச விண்வெளி மையம் சென்றடைந்தது. கஜகஸ்தான் நாட்டின், பாய்கோர் மாகாணத்தில் உள்ள, ரஷ்யாவின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதில், 'ஃபெடோர்' என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது.
18.சந்திரயான்-2 : மிகப்பெரும் சாதனை - நாசா முன்னாள் விஞ்ஞானி டான் தாமஸ் பாராட்டு
17.பேடிஎம் நிறுவனத்தின் புதிய தலைவராக அமித் நய்யார் நியமனம்
16.மத்திய அரசின் உதவுயோடு விரைவில் அனைத்து இல்லங்களிலும் இணைய வசதி வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
15.சென்னையில் அரசு பேருந்துகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில், BRTS முறையிலான பேருந்து இயக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
14.அமேசான் காடுகளை சாம்பலாக்கி வரும் தீ, பருவநிலை மாற்றங்கள் தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், வானிலிருந்து எடுக்கப்பட்ட காட்டுத் தீ தொடர்பான காட்சிகள் நெருங்கி வரும் பேரழிவை உணர்த்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
13.தனியார் நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை ஊழியர்களுக்கு வழங்கி வருவதைப் போல, முதன் முதலாக, பொதுத் துறையைச் சேர்ந்த, என்.டி.பி.சி., மின் நிறுவனமும் இம்முயற்சியில் இறங்கி உள்ளது.
12.டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டப்படும் என டில்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
11.ரிசர்வ் வங்கி அமைத்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான், ரூ.1.76 லட்சம் கோடி ரிசர்வ் வங்கியின் உபரி நிதி மத்திய அரசுக்கு மாற்றப்படுகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
10.மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கான சுங்க வரியை 5 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
9.உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சிந்து இன்று நாடு திரும்பினார்.
சுவிட்சர்லாந்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து 21-7,21-7 என ஜப்பானின் ஒகுஹராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.
8.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக பாகிஸ்தான் அதிபர் ஆரீப் ஆல்விக்கு சமூக வலைதள நிறுவனமான 'டுவிட்டர்' நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
7.மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் தெரிவித்துள்ளது.முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் நிதி பற்றாக்குறையாக இருக்கும் என அரசு கணித்துள்ள நிலையில், இந்த நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, ரிசர்வ் வங்கி வழங்கும் நிதி ஓரளவுக்கு உதவும் என தெரிகிறது.
6.கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். கர்நாடகாவில் பா.ஜ. முதல்வராக எடியூரப்பா உள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்திற்கு துணை முதல்வர்களாக, கோவிந்த் மக்தப்பா கரஜல், அஷ்வத் நாராயண், லக்ஷ்மண் சங்கப்பா சவடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5.ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள், இனி, பி.எப்., எனப்படும் மத்திய அரசின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தின்கீழ் வருவர். இதற்கான, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
4.ஐரோப்பிய நாடான, பிரான்சின், பியாரிட்ஸ் நகரில், 'ஜி - 7' எனப்படும், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், டிரம்ப் பங்கேற்ற நிலையில், பிரதமர் மோடியும், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நேற்று டிரம்பும், மோடியும் சந்தித்து பேசினர்.
3.பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள, மலிவு விலை மருந்தகங்களில், 1 ரூபாய்க்கு, 'சானிட்டரி நாப்கின்'கள் விற்பனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர், மான்சுக் மாண்டவியா, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சில திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நாடு முழுவதும், மத்திய அரசால், 'ஜன் அவுஷாதி' எனப்படும், மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மருந்தகங்களில், மிக குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சானிட்டரி நாப்கின், 2.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி, மலிவு விலை மருந்து கடைகளில், இது, 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
2.காஷ்மீருக்கு வருமாறு நான் விடுத்த அழைப்பை வைத்து, ராகுல் தரம்தாழ்ந்த அரசியல் செய்வதாக காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறினார்.
1.முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அவருக்கு 'நார்கோ டெஸ்ட் ' (உண்மை கண்டறியும் சோதனை ) நடத்த வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment